பாரதிதாசன் கவிதைகள் மற்றும் Bharathithasan Inspirational Quotes



முன்னேறு!

சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்: பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்
பேசுசுய மரியாதை உலகுஎனப் பேர்வைப்போம்!
ஈதேகாண்! சுமூகமே, யாம்சொன்ன வழியில்
ஏறுநீ ஏறுநீ ஏறுநீ ஏறே!

அண்டுபவர் அண்டாத வகைசெய் கின்ற
அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ?
கொண்டு விட்டோம் பேரறிவு, பெருஞ்செயல்கள்
கொழித்து விட்டோம் என்றிங்கே கூறுவார்கள்.
பண்டொழிந்த புத்தன், ராமாநுஜன்மு
கம்மது, கிறிஸ்து -- எனும் பலபேர் சொல்லிச்
சண்டையிடும் அறியாமை அறிந்தாரில்லை!
சமூகமே ஏறுநீ, எம்கொள்கைக்கே!

359  likes












Join WhatsApp
Join our WhatsApp Group