Happy Fathers Day Wishes in Tamil - தந்தையர் தினம் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள்

Find the images of Fathers Day Wishes in Tamil kavithai. You can download & share these tamil Fathers Day Wishesn in social media.





அப்பா

பத்து திங்கள் கருவில் சுமக்காத தாய்!
வாழ்நாள் முழுதும் நெஞ்சில் சுமக்கின்ற தாய்!
தான் காணாத உலகத்தை தன் மக்கள் காண வேண்டும்
என எண்ணும் நல்லுள்ளம்!
தன் கஷ்டத்தை தனக்குள் வைத்து தன்
குழந்தைகளுக்காக அனைத்தையும் செய்யும் தந்தைகளுக்கு வாழ்த்துக்கள்!
குழந்தைகளின் முதல் ஹீரோ தன் தந்தை தான்!
எப்போதும் என்னை கவனித்துக் கொள்வதற்கும்
என் கனவுகளை அடைய உதவி செய்வதற்கும் நன்றி.
தந்தையர் தின வாழ்த்துக்கள்!
அப்பா உங்கள் அன்பு, ஆதரவு, வழிகாட்டுதலுக்கு நன்றி!
நான் உங்களிடம் இருந்து நிறைய கற்று கொண்டேன்!
வாழ்க்கையில் நீங்கள் செய்த அனைத்து தியாகங்களுக்கும் நன்றி.
உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!
உங்கள் அன்பும், கவனிப்பும் எனக்கு எப்போதும்
உறுதுணையாக இருக்கும். உங்களை நேசிக்கிறேன் அப்பா!
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

தந்தையர் தின வாழ்த்துக்கள் (Father's Day wishes in Tamil)

இயற்கையின் ஒரு அற்புத படைப்பு எனில்
அது எனது அப்பா தான்.
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!
சிறு வயதில் ஆசானாய், வாலிப வயதில் தோழனாய்,
வாழ்வில் அங்கம் வகிக்கும்
அன்பிற்குரிய அப்பாவுக்கு இனிய வாழ்த்துக்கள்!
நாம் உயரத்தை அடைய தன்னை ஏணியாக்கி கொள்பவர் தந்தை,
உங்கள் தியாகம் எப்போதும் என் வாழ்வின் வழிகாட்டி.
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!
ஒற்றை வரியில் அப்பா – ஓராயிரம் சுமைகளை சுமப்பவர்!
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் (Happy Father's Day)!
வில்லன்போல் நீ நடித்ததெல்லாம், கவசம்போல் என்னை காக்கவேயென்று,
நற்பெயரில் நனைந்தபோது உணர்ந்தேன் அப்பா!
இந்நாளில் உனை வாழ்த்துகிறேன் (Father's Day)!
தன் பிள்ளைகள் வளர்ச்சியடைய வேண்டும் என்று
தன்னை தேய்த்துக் கொள்வார் அப்பா.
என் வாழ்வின் ஹீரோவுக்கு
இனிய தந்தையர் தின (Happy Father's Day) வாழ்த்துக்கள்!
கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு,
கடவுளே கிடைத்தார் வரமாக அப்பா!
எந்த பெண்ணும் அவள் கணவனுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு இளவரசியாகவே இருக்கிறாள்.

சிறப்பு வாசகங்கள்

“அப்பா இல்லாத உலகம் பூக்கள் அற்ற வசந்தம் போல!”
“தந்தையின் தியாகம் முகத்தில் தெரியாது, ஆனால் வாழ்வில் ஒளியாகும்.”
“நம் உயரத்தை அடைய தன்னை ஏணியாக்கி கொள்பவர் தந்தை.”
“அப்பா – ஒற்றை வரியில் ஆயிரம் சுமைகளை சுமப்பவர்.”
“தந்தையின் கை பிடித்தபடி வாழ்க்கை முழுதும் பயணிக்க ஆசை.”


Categories/Tags